பிக் பாஸ் சீசன் 6ல் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். ராப் பாடகரான இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். அதேபோல் இவர் குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டில் இவர் சில நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் கொமெண்ட்களை மாறி மாறி பெறுகிறார்.
இந்த நிலையில் தற்போது இங்கு பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது தினேஷ் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் வைரலாகி உள்ளது, மேலும் ரசிகர் பலரும் இவருக்கு இவ்வளவு அழகான குடும்பமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் அசீம் , ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 18 மிஞ்சி உள்ளனர். முன்னதாக ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் எவிக்ஷன் லிஸ்ட் இல் சேர்ந்துள்ளது. மேலும் இவர்களில் இப்போது யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.