வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: ஹிம்மாச்சல் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில், கடந்த 40 ஆண்டுகளாக மக்களை காங்., ஏமாற்றி வருகின்றது என்று பிரதமர் மோடி பேசினார்.
ஹிம்மாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அவர் பேசியவதாவது: கடந்த 40 ஆண்டுகளாக மக்களை காங்., ஏமாற்றி வருகின்றது. காங்., தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. மேலும் காங்., தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளிக்கின்றது. வளர்ச்சியே எங்களுக்கு இலக்கு.
பழங்குடியினரை புறக்கணிக்கும் காங்.,:
ராணுவ வீர்களுக்கான ஒன் ரேங்க், ஒன் ராங்க் திட்டத்தை பா.ஜ தான் அறிமுகப்படுத்தியது. பா.ஜ., வை மீண்டும் ஹிம்மாச்சல் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள். பழங்குடியினர் மக்களை காங்., புறக்கணித்தது. பா.ஜ., என்றாலே நிலைத்தன்மையானது.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய பாஜ., :
இம்முறை ஹிமாச்சல் தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இம்முறை, ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஹிம்மாச்சலத்தின் வளர்ச்சிப் பயணத்தைத் தீர்மானிக்கும். பாஜக என்றால் மக்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை என்று மக்களுக்கு தெரியும்.ஹிமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் முன்னுரிமை கொடுத்ததில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜ., நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவின் முதல் வாக்காளர், 106 வயதில் காலமான ஷியாம் சரண் நெகியின் சோகமான மறைவு பற்றி நான் அறிந்தேன். கடந்த நவ., 2ம் தேதி அவர் ஹிமாச்சலப்பிரதேச தேர்தல்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களித்தார். அவர் இறப்பதற்கு முன் தனது கடமையை நிறைவேற்றினார், அது ஒவ்வொரு குடிமகனையும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement