சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 1310 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 373 கனஅடியாக சரிந்து, ஏரியின் நீர்இருப்பு 2770 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 125கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 120 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன்கோட்டை ஏரி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி முழுமையாக நிரம்பியுள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 211 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 177 கனஅடியாக சரிந்து, நீர்இருப்பு 273 மில்லியன் கனஅடியாக உள்ளது.