நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.
படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி அன்று வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகாமல் புதிய போஸ்டர் வெளியானது. அதுமட்டுமின்றி படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருந்தது படக்குழு.
இந்தச் சூழலில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ நேற்று முன் தினம் (நவம்பர் 3) மாலை வெளியானது. மேலும் முழு பாடல் இன்று (நவம்பர் 5) வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டது.
#Ranjithame is all yours now
Lyric video https://t.co/pfJ3GAAymT
#Thalapathy @actorvijay sir & @manasimm
@Lyricist_Vivek@directorvamshi @iamRashmika @AlwaysJani #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries
#Varisu #VarisuPongal— Sri Venkateswara Creations (@SVC_official) November 5, 2022
அதன்படி வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. ‘கட்டுமல்லி கட்டி வச்சா’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.
பாடலில் விஜய்யின் நடனம் வெகுவாக ரசிக்க வைக்கிறது. அதேசமயம் ஜானி மாஸ்டர் விஜய்யின் அழகான நடனத்தை கொன்றுவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்கவிருப்பதாகவும் அதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.