லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு – கோவை காவல் ஆணையர் சொல்வது என்ன?

கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து மெகா இளைஞர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வருகிற நவம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவஇந்தியா பகுதியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

செய்தியாளர் சந்திப்பு

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியர் சமீரன், “இந்த மாநாட்டில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சமீரன்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்கள், உயரதிகாரிகள் பங்கேற்று இளைஞர்களிடம் பேச உள்ளனர். முக்கியமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர்” என்றார்.

ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “இளைஞர்களிடம் போதைத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்பட போட்டி நடைபெற உள்ளது. இதற்காக 180  குறும்படங்கள் வரை வந்துள்ளன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 10 படங்கள் மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்படும்.

பாலகிருஷ்ணன்

அவற்றில் சிறந்த 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் இயக்குநர்களுக்கு பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு லோகேஷின் அடுத்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.