வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா… வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் எப்போதும்’, விஜயுடன் ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 

தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான ‘சிங்கம் 2’ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். நடிப்பால் பலரை கவர்ந்தது மட்டுமின்றி, செயலாலும் பலரை கவர்ந்தவர் இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டியதை செய்து வளர்த்தும் வருகிறார். 

அந்த வகையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என தகவல் பரவிய நிலையில், கடந்த நவ. 2ஆம் தேதி தனது வருங்கால கணவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரிஸ் நகரின் இஃபிள் டவர் அருகே அவரின் வருங்கால கணவரான சோஹேல் கதுரியா ஹன்சிகாவுக்கு பிரபோஸ் செய்யும் புகைப்படத்தை ஹன்சிகாவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில், அடுத்த மாதம் திருமணம் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  சோஹேல் கதுரியா, திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் அவரது முதல் திருமணத்தில் ஹன்சிகா பங்கேற்று நிகழ்ச்சியில் நடனமாடியது குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அவரின் முதல் திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா நடனமாடும் வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஹன்சிகாவும், சோஹேல் கதுரியாவும் பிஸ்னஸ் பாட்னர் என்ற நிலையில், அவர்களுக்கு நீண்ட நாளாக பழக்கம் இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டில், சோஹேல் கதுரியாவுக்கு ரிங்கி என்ற பெண்ணுடன் கோவாவில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் ரோஹா நிகழ்ச்சியில் பங்கேற்று ஹன்சிகா கொண்டாட்டமாக நடமனாடியுள்ளார். 

மேலும், திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது ஹன்சிகாவுக்கும், சோஹேல் கதுரியாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில், தனது முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்தாரா என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. 

ஹன்சிகா – சோஹேல் கதூரியா திருமணம் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மெஹந்தி மற்றும் சங்கீத் டிசம்பர்-3ம் தேதியும், 4ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.