இந்தி இயக்குநர் சஜித் கான், பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதை அடுத்து, அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும்படி டெல்லி மகளிர் ஆணையம், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, சஜித் கான் மீது #MeToo-வில் புகார் கூறிவந்த நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவரை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்.
மேலும், சஜித் கான் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் தடலாடியாக பல குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சஜித் கானுக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்குள் குதித்தார். அவர் ஷெர்லின் சோப்ராவின் மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளையும் வீசினார். அதில், நடிகை ஷெர்லின் பலரையும் பிளாக்மெயில் செய்கிறார் என்றும், அவரின் (ஷெர்லின்) நிர்வாண புகைப்படத்தையும், வீடியோக்களையும் வைத்து பணம் சம்பாதிக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு, நடிகை ஷெர்லின்,”பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவதற்கு பதிலாக, ராக்கி அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தவும்” என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து, இரு தரப்பிலும் வார்த்தை போர் அதிகமாகியது.
சில நாள்களுக்கு முன், ராக்கி சாவந்தை கேலி செய்யும் விதமாக, ஷெர்லின் சோப்ரா மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டார். இதனால், தற்போது ஷெர்லின் மீது ராக்கி அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும், ராக்கி சாவந்த் மற்றும் அவரது வழக்கறிஞரும் நேற்று செய்தியாளரை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், ஷெர்லின் சோப்ரா ஆபாச படங்களை எடுத்தது குறித்து தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும், ஷெர்லின் சோப்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும் கூறியிருந்தனர்.
மேலும், இந்த சர்ச்சை நெட்டிசன்களுக்கு தீனிப்போடும் வகையில் அமைந்துள்ள நிலையில், அடுத்து ராக்கு வழக்கு தொடர்ந்தது குறித்து ஷெர்லினின் பதிலடியை எதிர்பார்த்து நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர்.