திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 90 அடியுள்ள அமராவதி அணையில் தற்போது நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1,390 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 175 கன அடி நீர் திறக்கப்படுகிறது.