பிலடெல்பியா,
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு மதுபான பாருக்கு வெளியே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது என்னவென தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை.
இதற்கு முன் வடக்கு கரோலினா பகுதியில் ராலே என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் பைடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என கண்டனம் தெரிவித்ததுடன், பல படுகொலைகள் செய்திகளாக வெளிவராமல் அதுபற்றி தெரிவது கூட இல்லை என வேதனை தெரிவித்து உள்ளார்.