அடிலெய்டு,
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஷாண்டோ ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் அதிரடி ஆட்டக்காரர் தாஸ் 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சவுமியா சர்க்கார் களம் இறங்கினார். அவர் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப் கான் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷகில் அல் ஹசன் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதற்கு டிஆர் எஸ் கேட்ட வங்கதேச அணிக்கு பாதகமான தீர்ப்பு வந்தது.
கேப்டன் ஷகிப் நடுவரிடம் கேள்வி கேட்ட படி வெளியேறினார். இதையடுத்து ஆபிப் ஹொசைன் இறங்கினார். இதற்கிடையில் தொடக்க ஆட்டக்காரர் ஷாண்டோ அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொசடெக் ஹொசைன் 5 ரன்னுக்கும், நூருல் ஹசன் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அப்போது வங்கதேச அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களே எடுத்தது. இதையடுத்து ஆபிப் ஹொசைனுடன் ஜோடி சேர்ந்த தஸ்கின் அகனது 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும், இப்திகார் அகமது, ஹாரிஸ் ராப் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்க உள்ளது.