ஆளுநருக்கும், முதல்வருக்கும் அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும்

தரப்புக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார்.

மேலும், ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர்

அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பிரச்னையை பற்றி பேசி தீர்க்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநரும், அரசும் இணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே அளுநர் எதிர்க்க கூடாது. இதனை இருவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!’ என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. இதையடுத்து, முரசொலி வெளியிட்ட கட்டுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.