வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: டி-20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. ராகுல், சூர்யகுமார் அரைசதம் அடித்தனர்.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணிக்கு ராகுல், ரோகித் வழக்கம்போல் துவக்கம் தந்தனர். முதல் ஓவரில் ரன் எதுவும் அடிக்காமல் ராகுல் மெய்டன் ஆக்கினார். கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னில் கேட்சானார். அடுத்துவந்த விராட் கோஹ்லி தன் பங்கிற்கு 26 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்து 51 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் பதிலாக அணியில் இடம்பிடித்த ரிஷாப் பன்ட் (3) ஏமாற்றினார்.
சூர்யகுமாருடன் கைகோர்த்த ஹர்த்திக் பாண்ட்யா, பொறுமையாக ரன்கள் சேர்க்க, சூர்யகுமார் அதிரடியாக ஆடினார். ஹர்த்திக் (18) கடைசி ஓவரில் அவுட்டானார். தொடர்ந்து கலக்கிய சூர்யகுமார் 23 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 25 பந்தில் 61 ரன்னுடனும், அக்சர் படேல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 79 ரன்கள் குவித்தது. இந்த உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியான இதில் இந்தியா வெற்றிப்பெறும் பட்சத்தில், ‛குரூப்-2′ பிரிவில் முதலிடம் பிடித்து, அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோதும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement