ரஷ்யாவில், கபேயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். கோஸ்ட்ரோமா நகரில் உள்ள பாலிகன் கபேயில், நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென தீ பரவியதை அடுத்து, கட்டடத்தில் இருந்த 250 பேர் பாதுகப்பாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.