சிம்லா: ஹிம்மாச்சல் பிரதேசத்தில் பா.ஜ., வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என ஹிம்மாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியீட்டு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா கூறினார்.
தேர்தல் அறிக்கை வெளியீடு:
ஹிம்மாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியவதாவது:
‛‛ 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்போம்”:
ஹிம்மாச்சல் பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். சுகாதார உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்தப்படும். இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் நடமாடும் கிளினிக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். இதனால் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன் பெற முடியும்.
இலவச ஸ்கூட்டர்:
ஹிம்மாச்சல் மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். பாஜக கணக்கெடுப்பு நடத்தும், வக்பு சொத்துக்கள் சட்டப்படி விசாரிக்கப்படும். இதனால் சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படும்.
ஹிம்மாச்சல் பிரதேசத்தில் பா.ஜ., வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். நிபுணர் குழு அமை க்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சிவில் சட்டம் அமலாகும். பாஜக அரசு ‘சக்தி’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் கீழ் 10 ஆண்டுகளில் 12,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement