3 பதவிகள், 2 பாதிப்புகள்… எடப்பாடி பிளான் குளோஸ்… மாட்டிக்கிட்டு தவிக்கும் அதிமுக ர.ர.,க்கள்!

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவுடன் தலைமை பொறுப்பிற்கான நாற்காலியை பிடித்துவிட்டதாக

கூறி வருகிறார். ஆனால் நீதிமன்றத்தை நாடி ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கலைத்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு எடப்பாடியின் கை ஓங்கியிருக்கிறது. ஏனெனில் கட்சியின் பெருவாரியான ஆதரவு இருக்கிறது.

பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அவர் பக்கம் நிர்வாகிகள் வெகு சிலரே இருக்கின்றனர். அவ்வப்போது தொண்டர்கள் படை நேரில் சந்தித்து ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இவ்வாறான தோற்றம் தான் நிலவி வருகிறது. ஆனால் உள்ளுக்குள் எடப்பாடி போட்டு வைத்த திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை என்று குமுறிக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் முக்குலத்தோர் சமூகத்தினர் அதிருப்தி அடையும் சூழல் உருவானது.

அதை சரிகட்டும் விதமாக கட்சியின் துணை பொதுச் செயலாளர், பொருளாளர், சட்டமன்ற துணைத் தலைவர் ஆகிய பதவிகளை அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கினார். ஆனாலும் பிளான் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இதை தேவர் ஜெயந்தி விழாவில் கண்கூடாக பார்க்க முடிந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்கவில்லை.

அவர் சார்பில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக விழாவில் சிலர் கொந்தளித்தனர். வெள்ளி கவசத்தை அளித்து ஓ.பன்னீர்செல்வம் தனது இருப்பை உறுதிசெய்தது மட்டுமின்றி செல்வாக்கையும் நிரூபித்தார். இத்தகைய பின்னடைவை சரிசெய்ய ஒரேவழி நீதிமன்ற வழக்குகளை முறியடிப்பது தான். எப்படியாவது கட்சி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி விட வேண்டும்.

அதற்கு முட்டுக்கட்டையாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இதையொட்டியே வழக்கறிஞர்கள் குழுவுடன் ஈபிஎஸ் தொடர்ந்து பேசி வருகிறார். இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் முக்கிய பேசுபொருளாக இரண்டு நிகழ்வுகள் நடந்தன. கோவை குண்டுவெடிப்பு, வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்.

எதிர்க்கட்சிகள் என்றாலே சிறிய பிரச்சினையையும் ஊதி பெரிதாக்கி விடுவர். அப்படிப்பட்ட சூழலில் அல்வா போல இரண்டு விஷயங்கள் கையில் கிடைத்தும் கோட்டை விட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. அறிக்கை, குற்றச்சாட்டு என சைலண்டாக முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பாஜக கள அரசியலில் வெளுத்து வாங்கி வருகிறது. எனவே அதிமுக உட்கட்சி பூசலில் இருந்து உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை எனில், கட்சி யார் கையில் என்று அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்துங்கள் என அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புவதை, குழப்பத்தில் தவிப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய விஷயங்கள் வெளிப்படையாக வரவில்லை எனினும், மாவட்ட அளவில் குமுறல்கள் எழுந்து கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.