வைரல் வீடியோ: யானைகளின் ஆட்டத்தையும், வேடிக்கையான செயல்களையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே சமூக ஊடகங்களைத் தொடர்ந்து உலாவுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வீடியோக்கள் யானைப் பிரியர்களாளை மட்டுமல்ல, அனைவரின் மன அழுத்தத்தையும் போக்கி மனதை லேசாக்கும் திறன் கொண்டவை. யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்கமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
அறிவியல் வளர்ச்சியில் செல்போன் தவிர்க்க முடியாத பொருள் ஆகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதற்கு கூட தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தனது பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிப்பதை காண தனி கூட்டம் உண்டு.
யானை செய்யும் அட்டகாசங்களை கீழ் கண்ட வீடியோவில் காணலாம்:
இந்த யானை பாகனிடம் பேசுவது, கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. கோவில் வளாகத்தில் யானைப்பாகனுடன் ஓடி பிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது போன்றவற்றை காண்பதற்காக கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கைஅதிகம் என்றே சொல்ல வேண்டும். வித்தியாசமான இந்த யானையின் குறும்புகள் அனைத்தும் பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.