'அண்ணியை' வம்புக்கு இழுக்கும் விஜி.. சீமான் மனைவியை இப்படி சொல்லலாமா?

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கயல்விழி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பழ நெடுமாறன் தலைமையில் நடந்தது. திருமணத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறையினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாம் தமிழர் வளர்ந்து வரும் முக்கிய கட்சியாக உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்ற கொள்கையில் தமிழ் தேசிய அரசியலை சீமான் செய்து வருகிறார். அரசியல் களத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளையும் எதிர்கட்சிகளாக கருதும் நாம் தமிழர் கட்சி, தேர்தல்களில் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வருகிறது.

மேடை பேச்சுக்களால் இளைஞர்களையும், புதிய தலைமுறையினரையும் கவர்ந்து வரும் சீமான் சோசியல் மீடியாவை எப்போதும் என்கேஜ் செய்து வருகிறார். அண்மையில், சீமானுடன் மனைவி கயல்விழியை வைத்து இன்டெர்வியூ நடத்தப்பட்டது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நடிகை விஜயலட்சுமி அதனை விமர்சித்து ஒரு வீடியோ போட்டுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக பழகிவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில், சீமானையும், அவரது மனைவி கயல்விழியையும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

சீமானும் அவரது மனைவி கயல்விழியும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை அந்த இன்டெர்வியூவில் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டனர். அதனால் கடுப்பான விஜயலட்சுமி இருவரையும் 420 என விமர்சித்துள்ளார். விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியதாவது, என்னுடன் பழகி என்னை ஏமாற்றிய சீமானை கயல்விழி திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே தேன்மொழி என்ற பெண் என்னுடன் வந்து சீமானை பற்றி கேட்டபோது என்னால் பண்ண முடிந்த நல்லதை பண்ணேன். ஆனால், கயல்விழி அப்படி வந்து கேட்கவில்லை.

சீமான் ஒரு 420 என்றால் கயல்விழி ஒரு 420. அவர் ஒரு நல்ல பொண்ணு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சீமான் நல்லவர் என்று எத்தனை பேர் சொன்னாலும் நான் சொல்லவே மாட்டேன். அதிமுக, திமுக, பாஜகவுடன் சேர்ந்துகொண்டு சீமான் எல்லாருடைய வாழ்க்கையையும் சீரழிக்கிறார்” என்று விஜயலட்சுமி பேசியதுடன் கயல்விழியையும் விமர்சித்து வம்புக்கு இழுத்துள்ளது தம்பிகளை கடுப்பேற்றியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.