வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நம் முன்னோர்கள் அறத்தின் வழி நடந்தார்கள், வாழ்வில் வெற்றி கண்டார்கள். அவர்கள் இயற்றிய பல அற நூல்கள் நமக்கு கற்பிப்பது “அறத்தின் வழி செல்லுங்கள்” என்பதுதான்.
அறம் என்றால் என்ன?
அறம் என்பது ஓர் ஒழுக்கமுறை. மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறை தான் அறம்.
உலக பொதுமறை சொல்லும் அறம்
–பொறாமை கொள்ளுதல்–
நம் வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பீடு செய்து பார்க்கின்ற பொழுதுதான் இந்த பொறாமை உணர்வு நம்முள் ஏற்படுகிறது. உதாரணமாக ‘அவனிடம் இருப்பதுபோல் என்னிடம் பணம் இலையே’ ‘அவன் வைத்திருப்பது போல ஒரு கார் என்னிடம் இருந்தால் நன்றாக இருக்குமே’, ‘அவனிடம் இருப்பது போல் பெரிய வீடு என்னிடமிலையே’ என்று நாம் என்னும்போது நமக்கு வருத்தம் தான் மிஞ்சும். அந்த வருத்தம் பொறாமையாக மாறிவிடும்.
இந்த பொறாமை குணம் நம்மை மற்றவருடன் நெருங்கி பழக விடாது, வெற்றி பெறுபவர்களிடமிருந்து நம்மை கற்றுக்கொள்ள விடாமல் அவர்களிடமிருந்து நாம் விலகி செல்ல வழி வகுக்கிறது.
பொறாமையின்றி மற்றவரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்போம் வெற்றி பெறுவோம்.
பேராசை
தேவைக்கும் ஆசைக்கும் வேறுபாடு தெரிந்துவிட்டால் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். உதாரணத்திற்கு நாம் இப்போது ஒரு பட்ஜெட் வைத்திருக்கிறோம், நம் தேவை அந்த பட்ஜெட்ல் ஒரு கார் வாங்க வேண்டும். Showroom போகிறோம் நாம் வாங்க தீர்மானித்துள்ள காரை விட விலை அதிகமான கார் இருக்கிறது, அது நம் கண்ணை கவர்கிறது.
தேவை என்னவென்று தெரிந்தவர்கள் தாங்கள் போட்டு வைத்துள்ள பட்ஜெட்டிற்கு ஏற்ப கார் வாங்குவார்கள். ஆனால் ஆசை அதிகமாக இருப்பவர்களோ கடனில் அந்த பெரிய காரை வாங்குவார்கள்.
வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே காரை பயன்படுத்துவார்கள், ஆனால் EMI மட்டும் சரியாக மாதாமாதம் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.
நம் தேவைகள் என்ன என்று தெரிந்து அதன் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம்.
கோபம் அதனால் வெளிவரக்கூடிய கடும்சொற்கள்
சின்ன சின்ன காரணத்திற்காக நாம் கோபம் கொள்கிறோம் கடுமையான சொற்களால் மற்றவரை காயப்படுத்துகிறோம்.
கோபத்தை கையாள தெரிந்த ஒருவன் கோபம் வரும் வேலையில் அமைதியாக இருக்கிறான், காரணம் அந்த கோபத்தில் நாம் பேசுகின்ற சொற்கள், செய்கின்ற செயல்கலால் வாழ்கை முழுவதும் நாம் வருத்தம் கொள்ளும் சூழல் அமைந்துவிடும்.
கோபத்திடம் இருந்து அமைதியாக நகர்ந்து சென்று விடுவோம்.
1. பொறாமை
2. பேராசை
3. கோபம்
4. கடும்சொற்கள்
இந்த நான்கு தீய குணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்வதே அறம். இனி அறத்தின் வழி வாழ முயற்சிப்போம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.