இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது… பங்கமாக கலாய்த்த தொல். திருமா!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய

, “இரட்டை இலை தற்போது இரட்டைத் தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்ததால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை என்றும், பாஜகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

திமுகவின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது – அண்ணாமலை அதிரடி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடியவர்கள் பட்டியலின மக்கள் தான். அவர்களை வளைத்து போட பாஜக பெரும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு எஃகு கோட்டை.

அதை யார் நினைத்தாலும் அசைக்க முடியாது என்றும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை பஞ்சு மிட்டாய் இயக்கம் என்று வர்ணித்த ராமதாஸை வாயடைக்க செய்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் கூறினார்”.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.