இருவழி இரயில்வே மேம்பாலத்திற்குப் பதிலாக, ஆறு வழி இரயில்வே மேம்பாலமாக கட்டப்படவுள்ள பகுதியினை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சென்னை – திருத்தணி – ரேணிகுண்டா சாலையில், அமைந்துள்ள இருவழி இரயில்வே மேம்பாலத்திற்குப் பதிலாக, ஆறு வழி இரயில்வே மேம்பாலமாக கட்டப்படவுள்ள பகுதியினை, இன்று  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சென்னை – திருத்தணி – ரேணிகுண்டா சாலையில், கி.மீ.75/6இல் இருவழி இரயில்வே மேம்பாலமாக உள்ளது.  இதனை ஆறுவழி இரயில்வே மேம்பாலமாக கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
    
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள,  இந்த இரயில்வே கடவு எண்.64 சென்னை – அரக்கோணம் சாலை சென்னை கோட்டத்திற்கு உட்பட்டதாகும்.      விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், தற்போதைய மேம்பாலத்தின் அருகில், ரூ.13.5 கோடி மதிப்பீட்டில், ஆறுவழி மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு உத்தேசமாக 1150 சதர மீட்டர் நில எடுப்பு செய்யப்பட வேண்டும்.

இரயில்வே மேம்பாலம் பண ஒப்பளிப்பு (Deposit) அடிப்படையில், இரயில்வே பணிகளின்கீழ், தமிழக அரசுடன் இணைந்து, தற்போதைய இருவழி மேம்பாலத்தை ஆறுவழியாக மேம்படுத்தப்பட வேண்டும். நிலஎடுப்பு மற்றும் வடிவமைப்பு முழுமைபெற்றவுடன் நிர்வாக ஒப்புதல் பெற்று, இப்பாலப்பணிகள் இரயில்வே துறையும், அணுகுசாலை நெடுஞ்சாலைத்துறையும்  முறையாக ஒப்பந்தம் கோரப்பட்டு, மேம்பாலப் பணிகள் துவக்கப்படும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்கள்.
    
இந்த ஆய்வின்போது, ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ஆர்.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சலைத்துறை, சேகர், தலைமைப் பொறியாளர் சென்னை மெட்ரோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.