டெல்லி: உயர்சாதிக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எஸ்.சி. எஸ்.டி. கூட்டமைப்புகளின் தலைவர் உதித்ராஜ் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, ஆனால் உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை எதிர்க்கிறேன். பட்டியலினம், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு பிரச்சனையின் 50 சதவீதத்தை மொத்த ஒதுக்கீடு தாண்டக்கூடாது என்றது உச்சநீதிமன்றம். இந்திரா சஹானி வழக்கை சுட்டிக்காட்டி, 50 சதவீதத்துக்கு மேல் மொத்த இடஒதுக்கீடு அளவு போகக்கூடாது என்றது உச்சநீதிமன்றம்.
உயர்சாதி ஏழைகளுக்குக்கான 10 சதவீத ஒதுக்கீடு வழக்கின்போது 50 சதவீதம் என்ற உச்சவரம்பு மாற்றமுடியாததல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பட்டியல் சாதிக்கான ஒதுக்கீடு பிரச்சனையில் 30 ஆண்டுகளாக இந்திரா சஹானி வழக்கை சுப்ரீம்கோர்ட் மேற்கோள் காட்டியது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.