டெல்லி: உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை; இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்புக்கு நீதிபதி பேலா திரிவேதி, நீதிபதி பர்திவாலா ஆதரவு தெரிவித்துள்ளனர்.