உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய சட்ட அமர்வின் 5 நீதிபதிகள், ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.  கல்வி மற்றும் அரசு வேலைகளில், உயர் சாதிகளை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்று இன்றைய தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. 

103வது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடி தன்மை குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (2022, நவம்பர் 7 திங்கட்கிழமை) இன்று வழங்கியது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. 

கல்வி மற்றும் அரசு வேலைகளில், உயர் சாதியை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகுமா என்ற மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 3க்கு 2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதில், நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தெரிவித்த நிலையில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா என மூன்று நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்ப மீறவில்லை என்று தெரிவித்தனர்.  எனவே, பெரும்பான்மையின் அடிப்படையில் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு முடிவு தெரிவித்துள்ளது.

10% இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை; இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை” என்று நீதிமன்ற அமர்வின் ஒரு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்தார். 

முன்னதாக, மத்திய அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இடஒதுக்கீட்டின் நோக்கம் என்பது, மக்களை வறுமையில் இருந்து உயர்த்துவது அல்ல என்பதும், சமூக நீதிக்கான அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்தது என்றும் வழக்குகள் தொடரப்பட்டன.

மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 50% உச்சவரம்பை மீறும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளதாக பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். பொருளாதார ரீதியில், முதல் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.