திருவனந்தப்புரம்: கேரளாவில் சட்டம் ஒழுங்கில் பிரச்னை உருவாக்கப்படுகிறது. மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என சிலர் என்னை மிரட்டுகின்றனர் என கேரள கவர்னர் ஆரிப் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக, கேரள கவர்னர் ஆரிப் கான்க்கும் இடையே பிரச்னை நடந்து வருகிறது. இந்நிலையில், கவர்னரின் நடவடிக்கைக்கு, எதிராக கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தை துவக்கி உள்ளன. இதற்கிடையே நவம்பர் 15ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து கவர்னர் ஆரிப் கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நவம்பர் 15 ஆம் தேதி சிபிஎம் அணிவகுப்பு நடத்த வேண்டாம், நான் ராஜ்பவனில் இருக்கும் ஒரு நாளில் நடத்துங்கள். நான் அங்கு வருகிறேன், பொது விவாதம் நடத்துவோம்.
துணை வேந்தர்கள் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்குகிறார்கள். மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என சிலர் என்னை மிரட்டுகின்றனர்.
தைரியம் இருந்தால், என்னை சாலையில் தாக்கினால், மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கி, ராஜ்பவனுக்குள் நுழையுங்கள் என்று நான் அவர்களை வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement