மார்பக புற்றுநோயை கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கண்டி மாவட்ட அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதத்திற்கு அமைவாக இந்த திட்ட நிடகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மார்பக புற்றுநோய் எவ்வாறு உருவாகும் ,அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் நடைமுறை பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு இங்கு இடம்பெற்றது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மினோலி ஜோசப் தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வு திட்டத்தின் ஊடாக சமூகத்தில் மார்பக புற்று நோயை கட்டுப்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
கண்எ மாவட்ட உதவி செயலாளர் திருமதி சடமாலி ஹேவகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலகம், கஹவத்த பிரதேச செயலகம் மற்றும் ஏனைய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.