கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது!


இளைஞர்களின் கையில் உள்ள மொபைல் போன்களில் கழிவறையில் உள்ள கிருமிகளை விட 10 மடங்கு அதிகமான கிருமி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மொபைல் போன்கள் தற்போது உள்ள நவீன காலத்தில் மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது, சொல்லப்போனால் மனிதனின் மூன்றாவது கை என்ற நிலைக்கு வந்துவிட்டது.

இந்த மொபைல் போன்கள் படிக்க, படம் பார்க்க, உணவு பொருட்களை ஆர்டர் செய்ய, செய்திகளை பகிர என அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது! | Mobile Contain 10 More Bacteria Than Toilet

இப்படி கையை விட்டு எடுக்காமல் பயன்படுத்தும் போன்களில் முழுக்க முழுக்க பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் செல்போன்களை எடுத்துச் செல்கிறோம், பல சந்தர்ப்பங்களில் அவற்றை பொது இடங்களில் ஆங்காங்கே பல மேசைகள், பாக்கெட்டுகள், கைகள், பைகள் என பல இடங்களில் வைக்கிறோம்.

இந்த  எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்கள் உள்ளன அவை எல்லாமே போனின் மேற்பரப்பிற்கு பரவுகின்றன.

கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது! | Mobile Contain 10 More Bacteria Than Toilet

ஆய்வு அறிக்கை: 

அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு அறிக்கையில் மொபைல் போன்களில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு குறித்து அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், டாய்லெட் இருக்கைகளை விட 10 சதவிகிதம் அதிகமான பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருப்பதாக  தெரியவந்துள்ளது.

இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் உள்ளன, இவை சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: வாட்டும் உக்ரைன் போர் சோர்வு…ஜெலென்ஸ்கியை வற்புறுத்தும் அமெரிக்கா

கழிவறையை விட மொபைல் போன்கள் ஆபத்தானது! | Mobile Contain 10 More Bacteria Than Toilet

தவிர்க்கும் முறைகள்: 

 பாக்டீரியாவை குறைக்க முதலில் கழிவறைக்கு போனை எடுத்து செல்வதை தவிர்ப்பது.

ஆல்கஹால் அடிப்படை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்தி உங்கள் தொலைபேசியை ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

உங்கள் தொலைபேசியில் நேரடியாக திரவத்தை தெளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது அதன் டிஸ்பிளேவை கெடுக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.