சர்தார் படத்தின் அசூர வசூல் – குதூகலத்தில் படக்குழு… குவியும் பாராட்டு!

இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த ‘சர்தார்‘ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாள் வசூல் சுமாராக இருந்தது. ‘சர்தார்’ உடன் திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனலா, ‘சர்தார்’ திரைப்படத்தின் வசூல் எகிறியது. 

தீபாவளி பண்டிகை, வார இறுதி நாள்கள் என அனைத்து விடுமுறை நாள்களிலும் சர்தார் ஓடிய திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆகின. உலகம் முழுவதும் சர்தார் வெளியான அக். 21ஆம் தேதி  6 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, 22ஆம் தேதி ரூ. 7 கோடி, 23ஆம் தேதி 8 கோடி, தீபாவளி தினமான 24ஆம் தேதி ரூ.10.25 கோடி, 25ஆம் தேதியில் ரூ. 8.50 கோடி, 26ஆம் தேதி 4.75 கோடி என வசூலானதாக தகவல் வெளியானது. 

‘சர்தார்’ வெளியாகி நேற்றுடன் 17 நாள் ஆன நிலையில், உலகம் முழுவதும் மொத்தம் ரூ. 100 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. 

சர்தார் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பிரினிஸ் திரைப்படம் சொதப்பியதுதான் சர்தாரின் அசூர வசூலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த வாரம், பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும் ‘லவ் டூடே‘ திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், தற்போது சர்தார் படத்தின் வசூல் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக, படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு கார் ஒன்றை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.