சென்னை- மைசூர் “வந்தே பாரத்” ரயில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
சென்டிரலில் இருந்து, இன்று அதிகாலை 5.50 மணிக்கு சோதனை ஓட்டத்தை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி மல்லையா தொடங்கிவைத்தார். சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணித்து, பிற்பகல் 12.30 மணிக்கு, ரயில் மைசூர் சென்றடைந்தது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் சேவையை, வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.