டிராபிக் விதிமீறலில் மத்தியஅரசு நிர்ணயித்த தொகைத்தான் வசூலிக்கப்படுகிறது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: டிராபிக் விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிலம் வசூலிக்கப்படும் அபராதம்,  மத்தியஅரசு நிர்ணயித்த தொகைத்தான்  என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

‘சாலை ஒழுங்குமுறை விதிகள்’ என்று அழைக்கப்படும் இந்திய சாலை விதிகள், ஜூலை 1989 இல் நடைமுறைக்கு வந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளன. இந்தச் சட்டங்களும் பரிந்துரைகளும் சாலையில் செல்லும் அனைத்து இந்திய ஓட்டுநர்களுக்கும் (இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் உட்பட) ஒழுங்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான ஓட்டத்தை உறுதி செய்வதற்காக பொருந்தும்.

நகரின் போக்குவரத்துக் காவல் சட்டங்கள் மற்றும் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவது, மீறுவது அல்லது புறக்கணிப்பது கடுமையான குற்றமாகும். இந்த போக்குவரத்துச் சட்டங்களை (ஆணைகள், விதிகள், நடைமுறைக் குறியீடுகள் மற்றும் செயல்கள்) செயல்படுத்துவது சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும். சட்டத்தை மீறுபவர்களின் பெயர்களில் சலான்களை வழங்குவதன் மூலம் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, விதிகளை உள்வாங்க அவர்களை ஊக்குவிக்கின்றன. தண்டனைகள் மற்றும் சட்ட சண்டைகள் எப்போதும் சக்திவாய்ந்த தடுப்புகளாகும். சாத்தியமான குற்றங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தண்டனைகள் குறித்து அறிவித்து உள்ளது.

தமிழக அரசு தற்போது மோட்டார் வாகன விதிகளில் மாற்றங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மோட்டார் வாகன விதிகளில் ஏற்கெனவே இருந்த அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் பத்தாயிரம் ரூபாயும், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் போட வேண்டும், இல்லையென்றால் அதற்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அதில் எத்தனை பேர் பயணிக்கிறார்களோ அவர்களுக்கும் அதே தண்டனை தொகை அபராதமாக வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு,   மோட்டார் வாகனச் சட்டத்தில் ஃபைன் தொகையை நிர்ணயித்தது மத்திய அரசுதான். அதைத்தான் நாங்கள் வசூலிக்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்த அபராதத் தொகையை நிர்ணயம் செய்தது, சட்டத் திருத்தத்தை மாற்றியமைத்தது அனைத்தும்  மத்தியஅரசுதான் என்றவர்,  இதனால் காவலர்களே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் சட்டத் திருத்தத்துக்கு கட்டுப்பட்டு வேகமாக வாகனத்தில் வருபவர்கள், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள்மீது மட்டும்தான் ஒன்றிய அரசு நிர்ணயித்த அபராதத் தொகையை விதித்து வருகிறோம்” என்றார்.

தமிழ்நாட்டில் வாகன விதிமீறல் தொடர்பாக தமிழக காவல்துறை வசூலித்து வரும் அபராதம் தொகை, பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வீதிக்கு விதி டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் வைத்துக்கொண்டு, மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் அரசு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடுமையான அபராதம் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.