தினகரனோடு கைகோர்க்கும் எடப்பாடி: சசிகலா, ஓபிஎஸ்ஸுக்கு கல்தா?

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில்

திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் அந்த கிளிப்பேச்சு. நேற்று மீண்டும் இதே கருத்தை கூறியுள்ளார்.

இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல, மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப் படுத்தும் விதமாக அப்படி பேசினாரா, அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை இவ்வாறு புரிந்துகொண்டாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 2024இல் மீண்டும் தேர்தல் என்ற பேச்சு கதைக்குதவாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் பேசியதும் கவனம் பெற்று வருகிறது. வழக்கமாக மெகா கூட்டணியை திமுகதான் அமைக்கும். ஆதரவு சக்திகள் பிரிந்து நிற்க வேண்டாம் என்பதற்காக தான் போட்டியிடும் இடங்களைக்கூட பல நேரங்களில் குறைத்துக்கொண்டு திமுக மெகா கூட்டணிகளை அமைத்துள்ளது. ஒப்பீட்டளவில் திமுகவின் வாக்குவங்கியை விட அதிமுகவின் வாக்குவங்கி ஓரிரு சதவீதம் அதிகம் என அரசியல் நோக்கர்கள் கூறிவந்ததையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

கூட்டணியில் சில கட்சிகள் இடம்பெற்றபோதும்கூட அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பது என்பது ஜெயலலிதாவின் பாணியாக இருந்திருக்கிறது. ஆனால் ஓபிஎஸ்,

என ஆளுக்கொரு பக்கம் சென்ற நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி அடிவாங்கிவிட்டதை எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்துகிறாரா என்றும் கேள்விகள் எழுகின்றன.

ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதாக ஒரு சாரார் தொடர்ந்து கூறிவந்தனர். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமோக வெற்றி பெற்ற பின்னர் அந்த கூற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது. ஸ்டாலினின் எழுச்சியும், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களும் அதிமுகவின் வாக்குவங்கியை பதம் பார்த்துவிட்டதாக கூறுகிறார்கள்.

அதனாலே திமுகவை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமியை தள்ளியுள்ளது. அந்த மெகா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் என்பது தான் இப்போதுள்ள கேள்வி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேமுதிக இறுதி நேரத்தில் கழட்டிவிடப்பட்டு அமமுகவுடன் ஐக்கியமானது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பாமகவும், பாஜகவும் அடுத்தடுத்து விலகி உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தன. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணையும் என்று அதிமுகவினர் கூறிவருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்று கூறியது அமமுகவை மனதில் வைத்துதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எடுத்து பார்த்தால் அதிமுகவின் வெற்றி பல இடங்களில் தடுக்கப்பட்டது அமமுகவால் தான். திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் பலவற்றில் அமமுக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அமமுகவை கூட்டணியில் இணைக்கலாம் என அமித் ஷா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் கூறியதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. தற்போது ஓபிஎஸ் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி என்ற அடிப்படையில் தினகரனோடு கைகோர்க்க தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள். தினகரனும் பச்சைகொடி காட்டிவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

இதனால் அதிமுகவுக்கு உரிமைகோரும் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி விடலாம் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.