கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே திருமணம் செய்வதாகக் கூறி காதலன் ஏமாற்றியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாவறையை சேர்ந்த சின்னப்பர்-தங்கபாய் தம்பதியரின் 3-ஆவது மகளான அபிதா, நித்திரவிளையை சேர்ந்த இளைஞரை காதலித்ததாகவும், இதற்கு இளைஞரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அபிதா வருத்தத்தில் இருந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அபிதா இறந்த நிலையில், பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காதலன் ஏமாற்றியதால் விசமருந்தி அபிதா தற்கொலை செய்தாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.