ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடுக்கிவிட்டார். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.
மொத்தம் ட்விட்டரின் 7,500 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேரை அன்றைய தினம் பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட சிலரை மீண்டும் பணிக்கு அழைக்க ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சிலரை தவறுதலாக பணிநீக்கம் செய்ததாகவும், எலான் மஸ்க் வைத்துள்ள திட்டத்திற்கு அவசியமான சிலரையும் மீண்டும் அழைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க இடைக்கால தேர்தலை முன்னிட்டு ட்விட்டர் ப்ளூ-டிக்கிற்கு மாத சந்தா கொண்டுவரும் திட்டத்தையும் எலான் சில நாள்களுக்கு தள்ளிவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது… தகவல் அளித்த எலான் மஸ்க்!
44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய ட்விட்டர் நிறுவனத்தில், நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதன் காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில பணியாளர்களுக்கு, மின்னஞ்சல் மூலம் மெமோ அனுப்பப்பட்டு, பணிநீக்கம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலருக்கோ பணிசார்ந்த மின்னஞ்சலில் லாக்-கின் செய்ய முடியாமல் போனதை அடுத்துதான், தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர்.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாத பணி நீக்க ஊதியம் அளிக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ள நிலையில், இந்தியர்கள் பலருக்கும் இரண்டு மாத ஊதியமே அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட சிலரையும், எலான் மஸ்க்கின் எதிர்கால திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் சிலரையும் மீண்டும் பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில், எந்தெந்த பிரிவினருக்கு வாய்ப்பளிக்கப்பட இருக்கிறது, இந்த பட்டியலில் இந்தியர்கள் எத்தனை பேர் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
மேலும் படிக்க | Twitter Layoff : ‘இப்போ தான் வேல போச்சு’ – ஜாலியாக அறிவித்த ட்விட்டர் பணியாளர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ