புதுடில்லி: ‘பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாபெரும் தோல்வியை பிரதமர் மோடி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பதாக அறித்தார். இதனையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்பப்பெற்றன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 21ம் தேதி வரையில் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருக்கும் பணம், ரூ.30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016, நவ.,4ம் தேதி ரூ.17.7 லட்சம் கோடி புழக்கத்தில் வைத்திருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளதாவது: பணமதிப்பிழப்பு அறிவிக்கும் போது, நாட்டில் கருப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அது நாட்டின் வணிகத்தையும், வேலை வாய்ப்பையும் அழித்தது. இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், பொதுவில் கிடைக்கும் பணம் கடந்த 2016ம் ஆண்டை விட 72 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த மாபெரும் தோல்வியை பிரதமர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement