தலைநகர் கீவில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேறத் தொடங்கிவிட்டார்கள்
உக்ரைன் மின்சார நிலையங்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்ய துருப்புகள்.
உக்ரைனில் மின்சார நிலையங்கள் அனைத்தும் ரஷ்ய தாக்குதலுக்கு இலக்கான நிலையில், இந்த குளிர் காலம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளில் உறைந்து சாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உக்ரைனுக்கு போதுமான ஆயுதங்களை வழங்கி, மின்சார நிலையங்களை காக்க மேற்கத்திய நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
@getty
இந்த நிலையில், உக்ரைனின் தேசிய கிரிட் ஆபரேட்டர் விடுத்துள்ள எச்சரிக்கையில், இன்றும் மின்சாரம் தடைபடுகிறது, ஏனென்றால் தேவையான மூன்றில் ஒரு பங்கு எரிசக்தி நாட்டில் பற்றாக்குறைவாக உள்ளது என்றார்.
இதனிடையே, கடுமையான மின்வெட்டு காரணமாக தலைநகர் கீவில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேறத் தொடங்கிவிட்டார்கள் என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கீவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான சூழல் நிலவுவதாகவும் தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் ஓடைகளை சுத்தீகரிக்கவும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
@upi
போர்க்களத்தில் கடும் பின்னடைவை எதிர்கொண்ட விளாடிமிர் புடின், உக்ரைனை நிலைகுலையச் செய்ய முன்னெடுத்த திட்டந்தான் மின்சார நிலையங்கள் மீதான குண்டு வீச்சு.
ஈரான் அளித்த ட்ரோன்களால் இரவோடு இரவாக உக்ரைன் மின்சார நிலையங்கள் மீது தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்ய துருப்புகள்.
இதனால், உக்ரைனின் மின் உற்பத்தித் திறனில் சுமார் 40 சதவீதம் சரிவடைந்தது.
ரஷ்ய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் கூறி வந்தாலும், கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
@getty
பொதுவாக, சிவிலியன் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகும்.
இருப்பினும், ரஷ்யா உக்ரைனில் தொடர்ந்து போர்க்குற்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது.
உக்ரைனில் மொத்தமாக 4.5 மில்லியன் மக்கள் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்கள் கொல்லப்பட வேண்டும், அல்லது குளிரில் உறைந்து சாக வேண்டும், இல்லை என்றால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், அப்போது மொத்தமாக நாட்டை மொத்தமாக எடுத்துக் கொள்ள் வேண்டும், இது தான் புடினின் தந்திரமா என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
@getty