உலகின் மிக உயரமான பெண் என்கிற கின்னஸ் சாதனையை படைத்த ருமேசா கெல்கி என்பவர் முதன்முறையாக விமானத்தில் சென்றுள்ளார், தனது முதல் விமான பயணம் அனுபவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்ந்திருக்கிறார். துருக்கியை சேர்ந்த சாஃப்ட்வெர் டெவலப்பரான ருமேசா கெல்கி (25) வீவர் சின்ட்ரோம் எனப்படும் ஒரு அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த நோயினால் தான் இவர் மிக உயரமாக இருக்கிறார். புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தகவலின்படி இவரது உயரமா 2.15 மீட்டர் அதாவது சுமார் 7 அடி உயரம் கொண்டவர் இவர், அளவுக்கதிகமான வளர்ச்சியினால் நோயின் தாக்கத்தினால் இவருக்கு அடிக்கடி மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டு அசைய முடியாமல் போய்விடுமாம் மற்றும் சாப்பிடுவதிலும், சுவாசிப்பதாலும் இவருக்கு அடிக்கடி சிரமும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்
தற்போது ருமேசா கெல்கி இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்க்கோ மாகாணத்திற்கு முதன்முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கென விமானத்தில் பிரத்தேயேகமாக ஆறு இருக்கைகளை கொண்டு அவர் படுப்பதற்கு ஏதுவாக ஸ்ட்ரெச்சர் போல விமான ஊழியர்கள் வடிவமைத்து கொடுத்து சௌகரியமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர். கெல்கி அந்த விமானத்தில் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 13 மணி நேரம் பயண செய்திருக்கிறார். பொதுவாக கெல்கி அவர் வெளியில் செல்வதற்கு சக்கர நாற்காலியை தான் பயன்படுத்துவாராம். தனது விமான பயண அனுபவம் குறித்து இஸ்தான்புல் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விமானத்தில் முதல் தடவையாக பயணம் செய்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், தன்னைப் போன்ற ஸ்ட்ரெச்சர் தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த விமானம் முக்கியமானது, இது எனது முதல் விமானம் மற்றும் இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்று கூறினார்.
மேலும் பேசியவர் இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல, பல நபர்களுக்கு முதல் அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் விமானத்தில் ஸ்ட்ரெச்சர் உதவியுடன் பயணம் செய்கின்றனர், இது அம்புலன்ஸ் மூலம் எப்படி ஒரு நோயாளியை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுவோமோ அதனை போன்றது ஆனால் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடியது. எனக்கு ஸ்கோலியோசிஸ் அல்லது முதுகெலும்பு வளைவு கோளாறு இருப்பதன் காரணமாக என்னால் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை, அதனால் நான் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டே விமானத்தில் பறந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ