சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அங்கு பொது இடங்களில் கரோனா கட்டுப்பாடு மிகத்தீவிரமாக கடைபிடிக்கப்படுவதால், அந்த பெண், பிளாஸ்டிக் கவரால் தன்னை மறைத்துக்கொண்டு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார். மேலும், மெட்ரோவில் உணவருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை, அந்த ரயிலில் பயணித்த மற்றொரு பயணி கவனித்து, வித்தியாசமான ஆடையை அந்த பெண் அணிந்துள்ளார் என தனது செல்போனில் வீடியோவில் எடுத்துள்ளார். பின்னர், அதில், அந்த பெண் வாழைப்பழத்தை சாப்பிடுவது தெரியவந்தது.
Woman in China covers herself in a plastic bag to eat a banana on a train. pic.twitter.com/vyguxVBZco
— Spiritonajourney (@LawsofLORE) November 4, 2022
இதையடுத்து, இந்த வீடியோவை அவர் இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, வீடியோ வைரலானது. பின்னர், பெண் வீடியோ எடுத்தவரிடம் அங்குள்ள ஊடகம் ஒன்று எடுத்த பேட்டியில் அவர்,”வூஹான் மாகாணம் உள்ளிட்ட சில இடங்களில் கரோனா தொற்று இருக்கிறது என்றாலும், இந்த பெண் ரொம்ப அதிகமாக தற்காப்பில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
இருப்பினும், மெட்ரோ ரயில்களுக்குள் சாப்பிடுவது வழக்கம் இல்லை என்பதால், அவர் தன்னை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுள்ளார்” என கூறியுள்ளார். மேலும், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளின் தீவிரம் குறித்து இணையத்தில் இந்த வைரல் வீடியோ விவாத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில், கரோனா கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக ஷாங்காய் நகரில் உள்ள டிஸ்னிலேண்டின் வாயில்களை சீனா மூடியுள்ளது. இதனால், பார்வையாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, டிஸ்னிலேண்டில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு கரோனா இல்லை என பரிசோதனை செய்து உறுதியான பின்னரே விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Black Hole: சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ