திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின்மனைவி ஜானகி. நேற்று மாலை கணவன் – மனைவி இருவரும் உறவினர் வீட்டு விழாவுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதையடக்குத்து, இவர்கள் கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இருவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து, புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகியுள்ளது. அதன் மூலம் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.