வாட்ஸ்அப் தகவல் உண்மையா?.. `மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லை என்றால் இழப்பீடு இல்லை!'

இப்போதெல்லாம் மனிதர்களைப் பீதியடையச் செய்வது போல, பல தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது. அப்படி சமீபத்தில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி தான், `மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு விபத்து இழப்பீடு வழங்கப்படாது’ என்ற தகவல். 

அந்த செய்தியில், “ஒருவர் தன்னுடைய வாகனத்திற்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்காத போது, விபத்து நேர்கையில், ஒட்டுமொத்த உள்ளடக்கிய விரிவான காப்பீடு (comprehensive policy) மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு (Third party Insuranace) ஆகிய இரண்டிலுமே இழப்பீடு வழங்கப்படாது.

காப்பீடு

இந்த புதிய சட்டம், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது’’ என்ற தகவல் பரவியது.

இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து பலரும் தங்களது அச்சங்களையும், எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினர்.

சமூக வலைத்தளத்தில் வெளிவரும் இந்த செய்தி உண்மையானதா என்பது குறித்து வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷிடம் பேசினோம். அவர் கூறுகையில், “அரசாணை வரும்பட்சத்திலேயே ஒரு செய்தியை நம்ப வேண்டும். அதுவரையில் அது வெறும் வதந்தியே.. இந்த தகவலில் இதுவரை எந்த அரசாணையும் வரவில்லை. அதனால் இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. 

வழக்கறிஞர் வி எஸ் சுரேஷ்

இப்போது வந்த செய்தியின் அடிப்படையில், காம்ப்ரீஹென்சிவ் காப்பீடானது, வாகனத்தைப் பழுது பார்க்கவும் அதை மாற்றவும் செலுத்தும் காப்பீடு. இதில் விபத்து, தீ மற்றும் இயற்கையால் உண்டாகும் சேதத்தின் போதும், வாகனம்  திருடப்படும் போதும் இழப்பீடு வழங்கப்படும். இதில் மூன்றாம் நபர் காப்பீடும் அடங்கும். 

இதுவே மூன்றாம் நபர் காப்பீடு என்பது, வாகனத்தில் செல்லும்போது நம்மால் ஒருவர் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வழங்கப்படும் காப்பீடு. இந்த காப்பீட்டில் தொலைந்துபோன வாகனம், விபத்து அல்லது இயற்கையால் அழிவைச் சந்தித்த வாகனத்திற்கு இழப்பீடு பெற முடியாது.

மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் குறித்துப் பார்க்கும் போது, அனைவரும் இந்த சான்றிதழை வாங்குவார்களா எனப் பார்க்கவேண்டும். அப்படி வாங்கினாலும் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், எத்தனை பேர் புதுப்பிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

அதோடு வாகனம் வாங்கியவர்களில் எத்தனை பேர் காப்பீடு செய்திருப்பார்கள். இதெல்லாம் பார்க்கும் போது ஒரு சிலர் மட்டுமே காப்பீடும் செய்து, சரியான சான்றிதழையும் வைத்திருப்பார்கள். பெரும்பாலானோருக்கு இது சிக்கல் தான். ’’ என்று கூறினார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.