விளாடிமிர் புடினுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் நிர்வாகம்: உக்ரைன் போரில் அதிரடி திருப்பம்?


புடினுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும், போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை

ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததும், விளாடிமிர் புடினுடன் நட்புறவை பேணவே ஜோ பைடன் விருப்பம்

ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர், விளாடிமிர் புடினின் உயர்மட்ட உதவியாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் உடனான அணு ஆயுதப் போரைத் தடுக்கும் முயற்சியில் ஜோ பைடன் நிர்வாகம் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, உக்ரைனில் போர் தீவிரமடைவதற்கு கடுமையாக எச்சரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

விளாடிமிர் புடினுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் நிர்வாகம்: உக்ரைன் போரில் அதிரடி திருப்பம்? | Biden Confidential Conversations Top Putin Aides

@UPI

ஆனால் உக்ரைன் போர் தொடர்பில் சாத்தியமான தீர்வுகள் பற்றி அவர்கள் விவாதிக்க மாட்டார்கள் என்றே தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, புடினுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் எனவும், போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறும் அமெரிக்க அதிகாரிகள் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததும், விளாடிமிர் புடினுடன் நட்புறவை பேணவே ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, 2021 ஜூன் மாதம் ஜெனீவா உச்சிமாநாட்டில் இருவரும் தனியாகவும் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளனர்.

விளாடிமிர் புடினுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் நிர்வாகம்: உக்ரைன் போரில் அதிரடி திருப்பம்? | Biden Confidential Conversations Top Putin Aides

@shutterstock

ஆனால், அக்டோபர் மாதம் நிலைமை தலைகீழானது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா தயாராவதாக அமெரிக்க உளவு அமைப்புகள் ஜோ பைடனுக்கு தகவல் அளித்துள்ளது.
இதனையடுத்து 2021 டிசம்பர் மற்றும் 2022 பிப்ரவரி மாதங்களில் புடினை தொடர்பு கொண்ட ஜோ பைடன் உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட கோரியுள்ளார்.

ஆனால் பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதன் பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியது.

விளாடிமிர் புடினுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் நிர்வாகம்: உக்ரைன் போரில் அதிரடி திருப்பம்? | Biden Confidential Conversations Top Putin Aides

@epa

இருப்பினும், தொடர்ந்து ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்துள்ளது பைடன் நிர்வாகம்.
தற்போது ரஷ்ய அதிகாரிகள் தரப்புடன் பைடன் நிர்வாகம் எப்போது பேச்சுவார்த்தை முன்னெடுத்தது என்பது தொடர்பான உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.