EWS Reservation Verdict: 100 ஆண்டுகள் போராட்டத்தில் பின்னடைவு… தமிழ் மண்ணின் சமூக நீதி குரல் தொடரும் – ஸ்டாலின்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை எனவும், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் மூன்று பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,”பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019ஆம் ஆண்டு ஒன்றிய பாஐக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திமுக முன்னெடுத்து நடத்தி வந்தது.  இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். https://zeenews.india.com/tamil/topics/ews

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விக்குட்படுத்திவரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிக்கை எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளில் முன்னோடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.