ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கடும் கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்தினால் 15 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஜெர்மனி நாட்டில் 4 ஆயிரத்து 500 பேரும், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேரும் உயிரிழந்திருக்கின்றனர். இங்கிலாந்தில் 3 ஆயிரத்து 200 பேரும், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கு கூடுதலானோரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.