டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்பட்டதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு, போக்குவரத்து இயக்கத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், கடுமையான பாதிப்பு என்ற நிலையில் இருந்து சற்று மேம்பட்டு, மிகவும் மோசம் என்ற நிலைக்கு திரும்பியுள்ளது. அதாவது, காற்றின் தரக்குறியீடு 400 முதல் 500 என்பது கடுமையான பாதிப்பை குறிக்கும் நிலையில், தற்போது மிகவும் மோசம் என்பதை குறிக்கும் 300 முதல் 400 வரையிலான தரக்குறியீட்டுக்குள் காற்றின் தரம், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி உள்ளது.