கனடா நாட்டு தேர்தலில் சீனா தலையிட முயன்றதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களுக்கு சீனா தேர்தல் நிதி அளித்ததாகவும், சீன உளவாளிகள் அவர்களுக்கு தேர்தல் ஆலோசகர்களாக செயல்பட்டதாகவும் அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
மேலும், ஆளும் கட்சி, எதிர்கட்சி வட்டங்களில் சீனாவின் செல்வாக்கை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.