கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்த சின்னப்பர் (56) என்பவரின் மூன்றாவது மகள் தனியார் கல்லூரியில் முதலாவது ஆண்டு படித்து வந்தார்.
இவர் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே வருண் என்பவரை காதலித்து வந்துள்ளதாகவும், அந்த நபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு மாணவியை அழைத்து சென்று சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
3 நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், 4ஆம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரில் காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால், மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in