14 வயது முதலே பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ததன் ஈர்ப்பும் தம்மை இந்த முயற்சிக்கு தூண்டியது
விவசாயிகளை ஆதரிப்பதற்காகவே அவர்களின் பொருட்களை மட்டும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா நாட்களில் சமூக மக்களுக்காக உணவு பண்டங்களின் கடை ஒன்றை திறந்த கிழக்கு லண்டனை சேர்ந்த நபர் தற்போது தமது நான்காவது கடையை திறந்துள்ளார்.
உள்ளூர் மக்கள் அதிகமாக விரும்பும் அல்லது அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடைகளை திறந்துள்ளார் ரோலோ மில்லர்ஷிப்.
Image: MyLondon
உள்ளூர் விவசாயிகளின் வேளாண் பொருட்கள் முதல், அனைத்தும் அப்பகுதி மக்களின் கடுமையான உழைப்பின் பலன் எனக் கூறும் ரோலோ மில்லர்ஷிப்,
சிறந்த தரமான தயாரிப்புகளை பிரித்தானிய கிராமப்புறங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்றார்போல் வெளியில் இருந்தும் உங்கள் வீட்டு வாசலுக்கு நேராக கொண்டு வருகிறோம் என்கிறார்.
பிளாக்ஹார்ஸ் சாலை பகுதியில் தமது நான்காவது கடையை திறந்துள்ள ரோலோ மில்லர்ஷிப், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன் முழுவதும் வேளான் சந்தைகளில் தமது 14 வயது முதல் வேலை பார்த்து வந்ததாக கூறும் ரோலோ மில்லர்ஷிப்,
மான்செஸ்டரில் மானுடவியல் படிப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Image: MyLondon
மட்டுமின்றி, 14 வயது முதலே பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ததன் ஈர்ப்பும் தம்மை இந்த முயற்சிக்கு தூண்டியது என்கிறார்.
16 வயதில் லண்டன் முழுக்க 26 கடைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறும் அவர்,
விவசாயிகளை ஆதரிப்பதற்காகவே அவர்களின் பொருட்களை மட்டும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் ஐந்தாவது கடையை திறக்க இருப்பதாகவும், பெரும்பாலும் Haggerston பகுதியில் அந்த கடை திறக்கப்படும் என்றார்.