தலைமுடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை!!

தலைமுடி கொட்டியதால் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரை சேர்ந்த பிரசாந்த் (29) என்பவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு தலைமுடி கொட்டும் பிரச்னை இருந்தது. இதனால் அவர் கோழிக்கோடில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் 2014ஆம் ஆண்டு முதல் தலைமுடி பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனாலும் தலைமுடி பிரச்னை சரியாகவில்லை. பிறகு கண் புருவத்தில் இருந்தும் முடிகள் உதிர்ந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு திருமணத்துக்கு பெண்ணும் கிடைக்கவில்லை. முடிகொட்டியதால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல், நண்பர்களை சந்திக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன உளைச்சல் காரணமாக பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தலைமுடி பிரச்னைக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை சம்பவம் தொடர்பாக பிரசாந்த் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.