இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடில்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலம் குருகிராமின் சாவ்லா பகுதியில், உத்தரகண்டைச் சேர்ந்த, 19 வயது பெண், தன் பெற்றோருடன் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2012 பிப்.,ல் வீட்டுக்கு திரும்பிய போது, மூன்று பேரால் காரில் கடத்தப்பட் டார்.
மகள் வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந் நிலையில், ஹரியானா மாநிலம் ரேவாரி அருகே பலத்த காயங்களுடன், முகம், உடல் சிதைக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
அவரது உடலில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, முகத்தில் ஆசிட் வீசப்பட்ட காயங்களுடன், பிறப்புறப்பில் உடைந்த மதுபாட்டில் இருந்தது. இது தொடர்பாக, ரவிக்குமார், ராகுல், வினோத் என்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு, புதுடில்லி விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து, 2014ல் தீர்ப்பு அளித்தது. இதை புதுடில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து மூவரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement