குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஈரானியரான அமினி, தெஹ்ரானில் கலாச்சார காவல் துறையினரால், கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று மர்மமான முறையில் இறந்தார். இதை அடுத்து அங்கே பெரும் போராட்டம் வெடித்தது. ஈரானிய அதிகாரிகள் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் பலவிதமான தாக்குதல்களை நடத்தினர். வெடிமருந்துகள், குண்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள் மீது நேரடியாகச் சுட்டனர். மேலும், அரசாங்கம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை அணுகுவதைத் தடுப்பது உட்பட இணையக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. நார்வேயை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, அமினி போராட்டங்களை ஒடுக்கியதில் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 186 பேரைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளது.
மஹ்சா அமினியின் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மரணத்தால் மூண்ட போராட்டம் ஏழு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈரான் அதிக அளவிலான பாதுகாவல் படைகளை நிறுத்தியுள்ளது. இளம் பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அகற்றி, எரித்து, ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, தெருவில் பாதுகாப்புப் படையினரை எதிர்கொண்டனர். பலரை கொன்று குவித்த போதிலும் அஞ்சாமல் ஹிஜாப் போராட்டம் தொடர்கிறது. உலகெங்கிலும் இருந்து போராட்டங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்தியாவின் கேரள மாநிலத்திலும் ஹிஜாபை எரித்து பெண்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு அரிய நடவடிக்கையாக, ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க டெஹ்ரானின் தெருக்களில் குதிரை மீது சென்று காவல் பணியில் ஈடுபடும் காவலர்களை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் AFP வெளியிட்ட செய்தி மூலம் இது உறுதிபடுத்தபட்டுள்ளது.
மேலும் படிக்க | ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
ரோந்துப் பணியில் இருக்கும் சிறப்புப் பிரிவு, சதேகியேயின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய சாலையில், ஏராளமான ஈரானிய தேசியக் கொடிகள் பறப்பதைக் காணலாம். 2013 இல் உருவாக்கப்பட்ட ஈரானின் குதிரை படை அஸ்வரன் என அழைக்கப்படுகிறது. இதில் துர்கோமன் மற்றும் அரேபிய குதிரைகள் முக்கியமாக அடங்கும்.
குதிரைப்படை பிரிவு கடந்த காலங்களில் ஈரானிய தலைநகரின் தெருக்களில், முக்கியமாக அணிவகுப்புகளின் போது காணப்பட்டது. ஆனால் போராட்டங்களின் போது அது பயன்படுத்தப்படுவது வழக்கத்திற்கு மாறானது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ