அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரும் 15 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அதிபராக இருந்த காலத்தில் வட கொரியா உடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம், டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்தத் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. இதன் பின்னர், வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறி, டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை, அந்நிறுவனம் முடக்கியது.
‘எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க..!’ – ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி!
இந்நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வரும் 15 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் (பண்ணை வீடு) வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்” என தெரிவித்து உள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து எதேனும் தகவலை ட்ரம்ப் வெளியிடுவாரா? அல்லது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் தான் மீண்டும் ட்விட்டரில் இணைவது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் வரும் 15 ஆம் தேதி பதில் கிடைக்கும்.