காத்மண்டு,
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் இன்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.
கடந்த அக்டோபர் 19-ந்தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று ஜூலை 31-ந்தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.